Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வடகொரியா ஏவுகணை - அவசரப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்துக்கு அழைப்பு

வடகொரியாவின் அண்மை ஏவுகணைத் தாக்குதலையொட்டி, அமெரிக்காவும் ஜப்பானும், ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத்துடனான அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. 

வாசிப்புநேரம் -

வடகொரியாவின் அண்மை ஏவுகணைத் தாக்குதலையொட்டி, அமெரிக்காவும் ஜப்பானும், ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத்துடனான அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

அந்தச் சந்திப்பு நாளை நடக்கவுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்தது.

பியோங்யாங் மீது மேலும் தடைகளை விதிக்க அமெரிக்கா வேண்டுகோள் விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஏவுகணைத் தாக்குதலை நடத்திய வடகொரியா பெய்ஜிங்கின் One Belt One Road எனும் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அண்மை ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு நடக்கும் மாநாட்டில் வடகொரியாவின் உயர்நிலைக் குழு கலந்துகொள்கிறது.

தென் கொரிய, அமெரிக்க அதிகாரிகள் அதனையொட்டி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

உலகநாடுகள், வடகொரியாவுக்கு நெருக்கடி அளித்துவருவதை அமெரிக்கா சுட்டியது.

எனினும் அந்த மாநாடு, ஒத்துழைப்புக்கான வெற்றிப்பாதையை வகுக்கும் இலக்கு கொண்டது எனச் சீன அதிபர் சீ ஜின்பின் வலியுறுத்தினார்.

பிற நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையோ, பிற நாடுகளை வலுக்கட்டாயப்படுத்துவதையோ சீனா நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்