Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தள்ளாத வயதிலும் தளராத முயற்சி

15,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து கீழே குதித்த ஆக வயதான வான்குடை சாகச வீரராக 101 வயது தாத்தா பெயர்பெற்றுள்ளார்.

வாசிப்புநேரம் -

101 வயது - கையில் குடை பிடித்து நடந்துசெல்வதற்கே சிரமப்படும் தள்ளாத வயது.

ஆனால் கைக்குடைகொண்டு நடப்பது என்ன? வான்குடைகொண்டு பறப்பேன் என்று களமிறங்கியுள்ளார் 101 வயது தாத்தா.

15,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து கீழே குதித்த ஆக வயதான வான்குடை சாகச வீரராகப் பெயர்பெற்றுள்ளார் ப்ரைசன் வில்லியம் வெர்டன் ஹேஸ்.

இங்கிலாந்தின் டெவன் பகுதியில் நேற்று தனது குடும்பத்தைச் சேர்ந்த 4 தலைமுறையினருடன் சேர்ந்து வான்குடை சாகசத்தில் ஈடுபட்டு புதிய உலகச் சாதனை படைத்துள்ளார் அவர்.

முதன்முறையாகக் கடந்த ஆண்டு தனது 100-ஆவது பிறந்தநாளில் ஹேஸ் வான்குடை சாகசத்தில் ஈடுபட்டார்.

 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்