Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இணையத் தாக்குதலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உலக நாடுகள்

வாரத்தின் முதல் நாளான இன்று, உலகளவில் நடத்தப்பட்ட இணையத் தாக்குதல் மேலும் மோசமாகலாம் என ஐரோப்பிய, பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

வாசிப்புநேரம் -

வாரத்தின் முதல் நாளான இன்று, உலகளவில் நடத்தப்பட்ட இணையத் தாக்குதல் மேலும் மோசமாகலாம் என ஐரோப்பிய, பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை, மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) செயல்முறையின் பழைய பதிப்புகளைக் கொண்ட கணினிகளை நச்சுநிரல் பாதித்தது.

அதனால், 150-உக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வங்கிகள், அரசாங்க அலுவலகங்கள், மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டன.

கணினிகளின் ஆவணத் தொகுப்புகள் தாக்கப்படாமல் இருக்க, செயல்முறைகளைப் புதுப்பிக்கும்படி வல்லுநர்கள் கேட்டுக்கொண்டனர்.

நிலைமையைச் சரிசெய்ய தொழில்நுட்ப ஊழியர்கள் இரவு பகல் பாராது உழைத்துக்கொண்டிருக்கின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்