Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இளைய குடியேறிகளுக்குப் பச்சைக் கொடி காட்டுகிறாரா டிரம்ப்?

இளைய குடியேறிகள் அமெரிக்காவில் தொடர்ந்து இருப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக ஜனநாயகக் கட்சியுடன் சமரசம் காணவுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
இளைய குடியேறிகளுக்குப் பச்சைக் கொடி காட்டுகிறாரா டிரம்ப்?

படம்: AFP/Ethan Miller

இளைய குடியேறிகள் அமெரிக்காவில் தொடர்ந்து இருப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக ஜனநாயகக் கட்சியுடன் சமரசம் காணவுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது பிரசார உறுதிமொழிகளிலிருந்து அதிபர் டிரம்ப் விலகுவதாகக் குறைகூறும் குடியரசுக் கட்சியினரை அது சினமூட்டியுள்ளது.  இளைய குடியேறிகள் பல்லாண்டாக அமெரிக்காவில் வாழ்ந்துவருகின்றனர்.

புலம்பெயர்ந்த பெற்றோருடன் இளம் வயதில் இங்கு கொண்டுவரப்பட்டது அவர்கள் தவறல்ல என்றார் அதிபர் டிரம்ப்.

நன்கு படித்து அவர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர். சிலர் ராணுவத்திலும் பணியில் உள்ளனர் என்பதைச் சுட்டினார் திரு. டிரம்ப்.

அமெரிக்காவின் முன்னைய அதிபர் பராக் ஒபாமா, அத்தகைய இளையர்களைக் காக்கும் பொருட்டு சட்டம் ஒன்றையும் இயற்றியிருந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்