Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வடகொரியாவுடனான வர்த்தக உறவைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது சிங்கப்பூர்

சிங்கப்பூர் வடகொரியாவுடனான வர்த்தக உறவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சிங்கப்பூர்ச் சுங்கத்துறை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவ்வாறு கூறப்பட்டது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூர் வடகொரியாவுடனான வர்த்தக உறவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.  சிங்கப்பூர்ச் சுங்கத்துறை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவ்வாறு கூறப்பட்டது.

வடகொரியா தொடர்பான வர்த்தகத் தடைகளை அமெரிக்கா சில தனிநபர்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் விதித்திருக்கிறது.

சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள இரண்டு நிறுவனங்களும் அவற்றில் அடங்கும். அவற்றில் ஒன்றான Chinpo நிறுவனம், ஐக்கிய நாட்டு நிறுவனம் விதித்திருக்கும் வர்த்தகத் தடைகளை மீறி வடகொரியாவுக்கு கப்பல்வழி ஆயுதங்களைக் கொண்டுசென்றது.
அதற்காகக் கடந்த ஆண்டு ஜனவரியில் அதன் மீது 180,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

இம்மாதம் 8ஆம் தேதியிலிருந்து வடகொரியாவுடனான வர்த்தக உறவின் தற்காலிக நிறுத்தம் நடப்புக்கு வந்துள்ளது. வர்த்தகத் தடையை தொடர்ந்து மீறினால் 200,000 வெள்ளி வரை அல்லது வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பைப்போல் நான்கு மடங்கு அபராதம், மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வடகொரியாவின் 7ஆவது ஆகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகச் சிங்கப்பூர் விளங்குகிறது.  சிங்கப்பூரின் வர்த்தக வட்டாரத்தில் வடகொரியத் தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

வடகொரியாவுடனான அனைத்து அரசதந்திர உறவுகளையும் துண்டித்துக்கொள்ள சிங்கப்பூர் தயாராக இல்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இவ்வாண்டு மே மாதம் கூறியிருந்தார்.

ஆயினும் வடகொரியாவுக்குத் தேவையில்லாமல் செல்வதைத் தவிர்க்குமாறு சிங்கப்பூர்க் குடிமக்கள் அனைவருக்கும் சென்ற செப்டம்பர் மாதம் ஆலோசனை விடுக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்