Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஐரோப்பிய ஒன்றிய மாற்றத்துக்கான செயல்திட்டத்தை வரைய மெக்ரோன், மெர்க்கல் இணக்கம்

ஃபிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன், ஐரோப்பிய அடித்தளம் சீரமைக்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -

ஃபிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன், ஐரோப்பிய அடித்தளம் சீரமைக்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிபராய் பொறுப்பேற்ற பின், முதல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஜெர்மனிக்குச் சென்ற அவர், அந்நாட்டுப் பிரதமருடன் நடத்திய பேச்சின் முடிவில் அந்த வேண்டுகோளை முன்வைத்தார். 

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும் திரு. மெக்ரோனும் ஐரோப்பிய ஒன்றியம், யூரோ மண்டலம் ஆகியவற்றின் மாற்றங்களுக்கான செயல்திட்டத்தை வரைய இணக்கம் கண்டுள்ளனர்.

தமது பயணத்தின்போது திரு.மெக்ரோன், யூரோ மண்டலம் சீரமைக்கப்படுவதற்கான உத்திகளை முன்வைத்தார். 

அவற்றுள் 28 உறுப்பு நாடுகளுக்கான தனிப்பட்ட வரவுசெலவுத் திட்டமும் ஒன்று. 

மேலும் அதற்கு தனி நாடாளுமன்றமும் நிதியைமச்சரும் இருக்கவேண்டும் என்றும் அவர் கருத்துரைத்தார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்