Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வைரக் காதணிகளின் விலை 57 மில்லியன் டாலர்

ஒரு ஜோடி வைரக் காதணி 57 மில்லியன் டாலருக்கு ஏலம் போயுள்ளது. ஆனால் அவ்விரண்டும் ஒன்றுக்கொன்று பொருத்தமானவை கூட அல்ல.

வாசிப்புநேரம் -
வைரக் காதணிகளின் விலை 57 மில்லியன் டாலர்

57 மில்லியன் டாலருக்கு ஏலம் போன காதணிகள்.

ஒரு ஜோடி வைரக் காதணி 57 மில்லியன் டாலருக்கு ஏலம் போயுள்ளது. ஆனால் அவ்விரண்டும் ஒன்றுக்கொன்று பொருத்தமானவை கூட அல்ல.

ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் வைரக் காதணிகளை ஏலத்தில் எடுத்துள்ளார்.

Apollo Blue, Artemis Pink என்ற இரண்டு வைரக் காதணிகள் ஜெனீவாவில் தனித்தனியாக ஏலத்துக்கு வந்தன.

அவற்றை ஜோடியாக வாங்க அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது.

நீல வைரத்தின் எடை சுமார் 14.5 காரட்.

இளஞ்சிவப்பு வைரத்தின் எடை 16 காரட்.

பேரிக்காய் வடிவ வைரக் காதணிகள் தென்னாப்பிரிக்கச் சுரங்கத்தில் கிடைத்தவை.

அவற்றுக்குக் கிரேக்கக் கடவுளரின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

ஏலத்தில் எடுத்தவர் வைரக் காதணிகளுக்குப் புதுப்பெயர்களைச் சூட்டவிருக்கிறார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்