Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

காற்றுத் தூய்மைக் கேட்டைக் குறைப்பதில், மரங்களைக் காட்டிலும் புதர்த் தோட்டங்கள் சிறந்தவை

நகர்ப்புறங்களில் உள்ள வானுயர்ந்த கட்டடங்களால் உருவாகும் காற்றுத் தூய்மைக் கேட்டைக் குறைப்பதில், மரங்களைக் காட்டிலும் குட்டையான புதர்த் தோட்டங்கள் சிறந்தவை என ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
காற்றுத் தூய்மைக் கேட்டைக் குறைப்பதில், மரங்களைக் காட்டிலும் புதர்த் தோட்டங்கள் சிறந்தவை

(படம்: AFP)

நகர்ப்புறங்களில் உள்ள வானுயர்ந்த கட்டடங்களால் உருவாகும் காற்றுத் தூய்மைக் கேட்டைக் குறைப்பதில், மரங்களைக் காட்டிலும் குட்டையான புதர்த் தோட்டங்கள் சிறந்தவை என ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

உயரமான மரங்கள், திறந்தவெளிகளில் உருவாகும் தூய்மைக் கேட்டைச் சமாளிப்பதிலேயே சிறந்தவை என, Atmospheric Environment என்னும் சுற்றுப்புற சஞ்சிகை குறிப்பிட்டது.

ஆனால், அடர்த்தியான புதர்த் தோட்டம் போன்ற வேலிகள், வாகனங்களின் மாசு நிறைந்த புகைபோக்கிகளில் இருந்து வெளியாகும் நச்சுத் துகள்களை அது வெளியேறும் இடத்திற்கு அருகிலேயே உறிஞ்சி சுத்திகரித்துவிடும்.

ஆகவே, நச்சுத்தன்மை மிக்க தூசுப் பொருள்களை சுவாசிப்பதிலிருந்து நகரவாசிகள் பெருமளவு தப்பிக்க முடியும்.

நடைபாதைகள் அகலமாக இருக்கும்பட்சத்தில், பாதசாரிகளுக்கும் சாலைக்கும் இடையே குட்டையான புதர்த்தோட்டங்களையும் புதர் வேலிகளையும் உருவாக்கலாமென முன்னணி ஆய்வாளர் பேராசிரியர் பிரஷாந்த் குமார் கூறினார்.

பெருநகரங்களில், குட்டையான புதர்த் தோட்டங்களைப் பராமரிக்கும் தோட்டக்காரர்கள் பலரும், அதில் ஏராளமான மாசுத் துகள்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டுவது வழக்கம்.

இது மரங்களின் பயனை மறுப்பதல்ல என்றபோதும், குட்டைப் புதர்த் தோட்டங்களின் அருமை போதுமான அளவுக்கு உணரப்படவில்லை என்பதையே காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்