Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

2030ஆம் ஆண்டிற்குள் மின்சார உற்பத்தியில் நிலக்கரியின் பயன்பாட்டைத் துடைத்தொழிக்க முயலும் கூட்டணி

மின்சார உற்பத்தியில் நிலக்கரியின் பயன்பாட்டை, 2030ஆம் ஆண்டிற்குள் துடைத்தொழிக்க உறுதி கூறப்பட்டுள்ளது. 20 நாடுகளை உள்ளடக்கிய ஒரு புதிய உலகளாவிய கூட்டணி அதனைச் சாத்தியமாக்கச் சூளுரைத்துள்ளது.

வாசிப்புநேரம் -

மின்சார உற்பத்தியில் நிலக்கரியின் பயன்பாட்டை, 2030ஆம் ஆண்டிற்குள் துடைத்தொழிக்க உறுதி கூறப்பட்டுள்ளது. 20 நாடுகளை உள்ளடக்கிய ஒரு புதிய உலகளாவிய கூட்டணி அதனைச் சாத்தியமாக்கச் சூளுரைத்துள்ளது.

"நிலக்கரியில்லா மின்சக்தி" என்பது கூட்டணியின் பெயர். கனடாவும், இங்கிலாந்தும் அந்தக் கூட்டணி நாடுகளை வழிநடத்துகின்றன. அவை, சுற்றுப்புறத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சூரியசக்தி, காற்றாலை போன்ற வழிகளில் எரிசக்தி உற்பத்திக்கு ஆதரவளிக்கன்றன. அதன் தொடர்பிலான பேச்சுவார்த்தை, ஜெர்மனியில் இரண்டு வாரம் நீடித்தது.

பணக்கார நாடுகளை முக்கியமாகக் கொண்ட அந்தக் கூட்டமைப்பு, தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொண்டு கரியமில வாயு வெளியீட்டைக் குறைப்பதற்கு இணங்கியது.

உலகின் மற்ற நாடுகளையும் அவ்வாறே செய்வதற்கு அவை ஊக்குவிக்கின்றன. உலக வெப்ப உயர்வுக்குக் காரணமான கரியமில வாயு வெளியீட்டில், நிலக்கரியின் பங்கு 40 விழுக்காடு. அடுத்த ஆண்டு ஐக்கிய நாட்டுப் பருவநிலை மாநாடு போலந்தின் கடோவைஸ் நகரில் நடைபெறும்.

ஐரோப்பாவின் ஆக மாசு மிகுந்த நகரங்களில் அது ஒன்று. அந்த மாநாடு நடைபெறுவதற்கு முன், குறைந்தது 50 உறுப்பினர்களைத் திரட்டத் திட்டமிடுகிறது கூட்டணி. இருப்பினும் வெப்ப வாயுக்களை அதிகமாக வெளியிட்டுவரும் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த முயற்சியில் பங்கேற்கவில்லை.

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டு முடிவுகளை, அமெரிக்கா நிறைவேற்றாது என அதிபர் டிரம்ப் அறிவித்த உடனேயே "நிலக்கரியில்லா மின்சக்தி" கூட்டணி தொடங்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்