Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

முதுமை மறதி நோயாளிகளைப் பணியாளர்களாகக் கொண்டுள்ள ஜப்பானிய உணவகம்

மத்திய தோக்கியோவில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு பரிமாறும் பணியாளர்கள் அனைவரும் முதுமை மறதி நோய் கொண்டவர்கள். அதிருப்திகரமான எந்தப் புகார்களும் இதுவரை அங்கு இல்லை.

வாசிப்புநேரம் -

மத்திய தோக்கியோவில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு பரிமாறும் பணியாளர்கள் அனைவரும் முதுமை மறதி நோய் கொண்டவர்கள். அதிருப்திகரமான எந்தப் புகார்களும் இதுவரை அங்கு இல்லை.

The Restaurant of Order Mistakes என்பது அந்த உணவகத்தின் பெயர். ஜப்பானில் பிரபலமான சிறுவர் புத்தகத் தலைப்பின் தழுவலாக அந்தப் பெயர் அமைந்துள்ளது.

உலக அல்ஸைமர்ஸ் தினத்தை முன்னிட்டு அந்த ஏற்பாடு செய்யப்பட்டது. எந்தப் பின்விளைவுக்கும் பயமில்லாமல் அந்தப் பணியாளர்கள் வாடிக்கையாளர்களுடன் பழகப் பாதுகாப்பான இடமாக அந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த உணவகத்துக்குச் செல்வது நல்ல அனுபவமாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் பலர் கூறினர்.

உலகில் முதுமை மறதி நோயை எதிர்கொள்ளும் முயற்சிகளில் ஜப்பான் சிறந்து விளங்குகிறது. 5 மில்லியன் ஜப்பானிய மக்களைப் பாதிக்கும் முதுமை மறதி நோயைக் கையாள்வதற்கான முயற்சிகளை ஜப்பான் தொடர்ந்து எடுத்து வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்