Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தாவரங்களை மட்டும் உட்கொள்ளும் கார்ப்பந்தய ஓட்டுநர்

ஃபார்முலா ஒன் கார்ப்பந்தய நட்சத்திரமான லூயிஸ் ஹெமில்ட்டன், ஆவணப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு, விலங்குகளைச் சேர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்கத் தீர்மானம் கொண்டுள்ளதாகக் கூறினார்.

வாசிப்புநேரம் -
தாவரங்களை மட்டும் உட்கொள்ளும் கார்ப்பந்தய ஓட்டுநர்

லூயிஸ் ஹெமில்ட்டன். (படம்: AFP)

ஃபார்முலா ஒன் கார்ப்பந்தய நட்சத்திரமான லூயிஸ் ஹேமில்ட்டன், ஆவணப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு, விலங்குகளைச் சேர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்கத் தீர்மானம் கொண்டுள்ளதாகக் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாய் அவர் படிப்படியாக அந்த உணவு முறையைப் பின்பற்றி வருவதாய், சிங்கப்பூரில் நடைபெற்று வரும் F1 கார்ப்பந்தயப் போட்டியில் பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஈராண்டுகளுக்கு முன்னர் இறைச்சி வகைகளைச் சாப்பிடுவதை நிறுத்தியதாக ஹேமில்ட்டன் கூறினார். பின்னர் கோழியையும் அதன் பிறகு மீனையும் நீக்கியதாக அவர் கூறினார்.

மாமிச வர்த்தகத்தால் சுற்றுப்புறத்திற்கு ஏற்படும் கேட்டினையும் விலங்குநலன் பற்றியும் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தபிறகு அந்த மாற்றங்களை மேற்கொள்ளத் தொடங்கியதாக ஹேமில்ட்டன் கூறினார்.

இதய நோய், நீரிழிவுப் பிரச்சினை, புற்றுநோய் ஆகிய நோய்களைத் தவிர்க்க புதிய உணவுமுறை உதவும் என்கிறார் அந்த F1 வீரர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்