Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டின் மறுபரிசீலனையை அமெரிக்கா செய்யவில்லை

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகிக் கொள்வதாக அமெரிக்கா திட்டவட்டமாய்த் தெரிவித்துள்ளது. உடன்பாட்டை அமெரிக்கா மறுபரிசீலனை செய்துவருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயரதிகாரி ஒருவர் முன்னர் கூறியிருந்தார்.

வாசிப்புநேரம் -

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகிக் கொள்வதாக அமெரிக்கா திட்டவட்டமாய்த் தெரிவித்துள்ளது. உடன்பாட்டை அமெரிக்கா மறுபரிசீலனை செய்துவருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயரதிகாரி ஒருவர் முன்னர் கூறியிருந்தார்.

ஆனால் அமெரிக்கா அதனை மறுத்தது.

2015ஆம் ஆண்டு அமெரிக்காவும் 187 நாடுகளும் இணைந்து பருவநிலை மாற்றம் தொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்டன. அதிகரித்துவரும் பூமியின் வெப்பத்தைக் குறைக்க வகைசெய்வது உடன்பாட்டின் நோக்கம்.

உடன்பாட்டால் அனுகூலம் இல்லை என்று கூறிய அமெரிக்கா, அதை நிராகரிக்கப்போவதாக இந்த ஆண்டு ஜூன் மாதம்  அறிவித்தது.

தனக்குச் சாதகமான கூடுதல் அம்சங்களைச் சேர்த்தால் மட்டுமே உடன்பாட்டுக்கு இணங்குவது குறித்துப் பரிசீலிக்க முடியும் என்றும் அது தெரிவித்தது. பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டம் ஒன்று அண்மையில் கனடாவின் மாண்ட்ரியால் நகரில் நடைபெற்றது.
உடன்பாட்டில் கையெழுத்திட்ட 30க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் அதில் கலந்துகொண்டனர். அமெரிக்காவும் அதில் பங்கெடுத்தது.  2020ஆம் ஆண்டு உடன்பாடு செயல்முறைக்கு வரும்வரை அமெரிக்கா கூட்டங்களில் கலந்துகொள்ளவேண்டும் என்று மற்ற நாடுகளின் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு உட்படுவதற்கு, கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற நாடுகள் கடப்பாடு தெரிவித்தன. பூமியை வாழ்வதற்கு உகந்த சிறந்த இடமாக மாற்றமுடியும் என்ற நம்பிக்கை ஐரோப்பாவிற்கு இருக்கிறது என்றார் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி மிகுவெல் கேனட். அதற்குக் குடிமக்களின் பேராதரவு இருப்பதால் அதை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்