Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புகைபிடிக்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு நினைத்ததை விட புகையால் அதிக பாதிப்பு

புகைபிடிக்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு நினைத்ததை விட புகையால் அதிக பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

வாசிப்புநேரம் -

புகைபிடிக்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு நினைத்ததை விட புகையால் அதிக பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

வீட்டிலோ, வாகனத்திலோ திறந்த சன்னல் அருகில் புகைபிடிப்பதால், புகையின் பாதிப்பைக் குறைக்கலாம் என்று நினைத்தால் அது தவறு என்று கூறப்பட்டது.

இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது நிரூபணமாகியுள்ளது.

65 புகைபிடிக்கும் பெற்றோர் கலந்துகொண்ட ஆய்வில், அவர்கள் நினைப்பதை விட பிள்ளைகள் தினசரி அதிகப் புகையைச் சுவாசிப்பது தெரியவந்துள்ளது.

புகைபிடிப்பவரின் வாகனத்தில் மதுக்கூடத்தை விட அதிக புகைத் துகள்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புகை அறையினுள் சூழ்வதனாலும் சூழாமல் போவதனாலும் புகையை நுகர்வதாலும் அதன் பாதிப்பை ஊகிக்க முடியாது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சிறுவர்கள் புகைபிடிப்போர் விடும் புகையைச் சுவாசிப்பதால் அவர்களின் நுரையீரலும் இருதய, இரத்த நாளங்களும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்