Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பயங்கரவாதச் சம்பவங்களை முறியடிக்க ஆயத்தம் - ஆஸ்திரேலிய இராணுவம்

ஆஸ்திரேலியா, பயங்கரவாதச் சம்பவங்களை முறியடிக்க தனது இராணுவம் ஆயத்தமாய் உள்ளதாக அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பயங்கரவாதச் சம்பவங்களை முறியடிக்க ஆயத்தம் - ஆஸ்திரேலிய இராணுவம்

(படம்: AAP/Brendan Esposito/via REUTERS)

ஆஸ்திரேலியா, பயங்கரவாதச் சம்பவங்களை முறியடிக்க தனது இராணுவம் ஆயத்தமாய் உள்ளதாக அறிவித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களில் சில மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளது ஆஸ்திரேலியா. 

அதன்படி, பயங்கரவாதச் சம்பவம் ஏதேனும் நடந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதில் முதலில் உள்ளூர்க் காவல் படையினரே சிறந்த பங்காற்ற முடியுமென ஆஸ்திரேலியா குறிப்பிட்டது. 

என்றாலும், காவல் துறையின் ஆற்றலை விரிவுபடுத்துவதில் இராணுவம் கூடுதல் ஆதரவை வழங்கமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் தனி நபர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 

அதன் காரணமாக, காவல் துறையின் அதிகாரத்தையும், அணுகுமுறைகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவை உருவாகியுள்ளது. 

2005 இல் உள்நாட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 

அதில் முதன்முறையாகச் சில மாற்றங்கள் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்