Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பார்சலோனா பயங்கரவாதத் தாக்குதலுக்கு சிங்கப்பூர் கண்டனம்

பார்சலோனாவில் இருப்பதாகப் பதிவுசெய்துகொண்ட சிங்கப்பூரர்களை அமைச்சு தொடர்பு கொண்டுள்ளது. சம்பவத்தில் நேரடியாக எந்த சிங்கப்பூரரும் பாதிக்கப்படவில்லை என்றும் அது சொன்னது.

வாசிப்புநேரம் -
பார்சலோனா பயங்கரவாதத் தாக்குதலுக்கு சிங்கப்பூர் கண்டனம்

( படம் : AFP )

ஸ்பெயினின் பார்சலோனா நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு சிங்கப்பூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்தச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் மாண்டனர்.

பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு வெளியுறவு அமைச்சு தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.
காயமடைந்தோர் விரைவில் குணமடைவர் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சு சொன்னது.

பார்சலோனாவில் இருப்பதாகப் பதிவுசெய்துகொண்ட சிங்கப்பூரர்களை அமைச்சு தொடர்பு கொண்டுள்ளது.
சம்பவத்தில் நேரடியாக எந்த சிங்கப்பூரரும் பாதிக்கப்படவில்லை என்றும் அது சொன்னது.

நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
பார்சலோனாவில் உள்ள சிங்கப்பூரர்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பில் இருக்கும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

அவசர உதவி தேவைப்படுவோர், வெளியுறவு அமைச்சின் அதிகாரியை +65 6379 8800/8855 என்ற எண்களின்வழி தொடர்பு கொள்ளலாம்.

mfa_duty_officer [at] mfa.sg என்ற மின்னஞ்சல் முகவரியையும் நாடலாம். 


தொடர்புடையவை...

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்