Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரொஹிஞ்சா மக்களுக்காகப் புதிய முகாம்

இடவசதி இல்லாததால் தஞ்சமடைந்தோரில் பலர் சாலையோரங்களிலும், திறந்தவெளிகளிலும் பொழுதைக் கழித்து வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
ரொஹிஞ்சா மக்களுக்காகப் புதிய முகாம்

(படம்: AFP)

மியன்மாரிலிருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்குப் புதிய முகாம் அமைத்துக் கொடுப்பதில், பங்களாதேஷ் மும்முரமாய் ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே அங்குள்ள முகாம்கள் அகதிகளால் நிரம்பி வழிகின்றன.

இடவசதி இல்லாததால் தஞ்சமடைந்தோரில் பலர் சாலையோரங்களிலும், திறந்தவெளிகளிலும் பொழுதைக் கழித்து வருகின்றனர்.
ரக்கைன் மாநில வன்முறை தொடர்பில் மியன்மாரை உலக நாடுகள் கண்டித்து வரும் சூழலில், அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் அபயம் தேடி பங்களாதேஷ் செல்கின்றனர்.

கடற்கரை நகரான காக்ஸ் பஸாரில் திரும்பும் திசையெங்கும் அகதிகள்மயம்.

(படம்: AFP)

14,000 தற்காலிகத் தங்குமிடங்கள் அமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.

ஏற்கனவே உள்ள தற்காலிக முகாம்களில் போதுமான இடம், உணவு, தண்ணீர் இல்லை.

அந்த முகாம்களில் மானிடப் பேரிடர் நிகழக் காத்திருக்கிறது.

ஆகவே, பத்து நாட்களுக்குள் புதிய முகாமை உருவாக்கியாக வேண்டும் என்று அனைத்துலகத் தொண்டு அமைப்புகள் கூறுகின்றன.

என்றாலும் முன்னுரைக்க முடியாத வானிலை காரணமாக அந்தப் பணியில் கூடுதல் சவால்களைச் சந்திக்க நேரலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்