Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியாவில் மின்னிலக்கக் கட்டணச் சேவையைத் தொடங்கிய கூகுள்

கூகுள் பாரத ஸ்டேட் வங்கியுடனும் HDFC, ICICI, Axis போன்ற தனியார் வங்கிகளுடன் இணைந்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் மின்னிலக்கக் கட்டணச் சேவையைத் தொடங்கிய கூகுள்

(படம் : Reuters)

கூகுள் நிறுவனம் (Tez) டேஸ் எனும் மின்னிலக்கக் கட்டணச் செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

டேஸ் என்றால் ஹிந்தியில் வேகம் என்று அர்த்தம். பயனீட்டாளர்கள் தங்களின் வங்கிக் கணக்குகளைச் செயலியுடன் இணைத்துக்கொள்ளலாம்.

கூகுள் பாரத ஸ்டேட் வங்கியுடனும் HDFC, ICICI, Axis போன்ற தனியார் வங்கிகளுடன் இணைந்துள்ளது.

கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

அது பலரை மின்னியல் கட்டண முறையைப் பயன்படுத்தும் கட்டாயத்துக்குத் தள்ளியது.

அதனைத் தொடர்ந்து மின்னிலக்கச் செயலிகள் பிரபலமாயின.

Paytm, அலிபாபா போன்ற பிரபலச் செயலிகளுடன் டேஸ் போட்டியிடும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்