Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தோனேசியாவில் சமயப் பள்ளி மூடப்படலாம்

மேற்கு ஜாவாவில் அமைந்துள்ளது Ibnu Mas'ud சமயப் பள்ளி. அதை மூட வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து அங்கு பயின்ற மாணவர்கள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவில் சமயப் பள்ளி மூடப்படலாம்

(படம்:Reuters)

இந்தோனேசியாவில், ஐ எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒரு சமயப் பள்ளி மூடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஜாவாவில் அமைந்துள்ளது Ibnu Mas'ud சமயப் பள்ளி.

அதை மூட வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதைத் தொடர்ந்து அங்கு பயின்ற மாணவர்கள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த நாலாண்டுகளில் அந்தப் பள்ளியில் பணியாற்றும் 8 ஊழியர்களும், 4 மாணவர்களும் சிரியாவுக்குச் செல்லவோ, ஐ எஸ் பயங்கரவாத அமைப்பில் சேரவோ முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆனால், ஐ எஸ் பயங்கரவாத அமைப்பு உள்ளிட்ட எந்தக் கிளர்ச்சிக் குழுவினருக்கும் ஆதரவளிக்கவில்லை என்று அந்த சமயப் பள்ளி மறுத்து வருகிறது.

பள்ளியை மூடவும் அதன் நிர்வாகம் மறுத்தது.

ஆனால் பள்ளி தொடர்ந்து இயங்கினால், கிராம மக்கள் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடும் என்று காவல்துறையினர் எச்சரித்திருந்தனர்.

சமயப் பள்ளியை மூடியே ஆக வேண்டும் என்பதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.

ஆனால் அது எப்போது மூடப்படும் என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்