Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எரிந்த ரொஹிஞ்சா கிராமங்கள்-துணைக்கோளப் படங்கள்

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்திலுள்ள ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வசித்த கிராமங்கள் எரிந்த நிலையில் காணப்படும் துணைக்கோளப் படங்களை, அனைத்துலக மனித உரிமை வெளியிட்டுள்ளது.  

வாசிப்புநேரம் -
எரிந்த ரொஹிஞ்சா கிராமங்கள்-துணைக்கோளப் படங்கள்

(படம்:Amnesty International)

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்திலுள்ள ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வசித்த கிராமங்கள் எரிந்த நிலையில் காணப்படும் துணைக்கோளப் படங்களை,
அனைத்துலக மனித உரிமை வெளியிட்டுள்ளது.

இது மியன்மார் தற்காப்புப் படைகளின் திட்டமிட்ட இன அழிப்பு என, அமைப்பு குற்றஞ்சாட்டியது.

சுமார் 26 கிராமங்கள் தீயால் நாசமாகியுள்ளன.

பாதுகாப்புப் படையினர், பெட்ரோல் ஊற்றியும் எறிபடைகளைப் பாய்ச்சியும் ரொஹிஞ்சாக்களின் வீடுகளைக் கொளுத்தியதாக அமைப்பு குறிப்பிட்டது.

வீட்டில் தீப்பற்றியதும் அதிலிருந்து தப்பிச் செல்லும் ரொஹிஞ்சாக்களை நோக்கிப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்