Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐ.நா. பொதுச் சபையில் முதல்முறையாக நாளை உரையாற்றவிருக்கும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் சபையில் நாளை முதல்முறையாக உரையாற்றவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
ஐ.நா. பொதுச் சபையில் முதல்முறையாக நாளை உரையாற்றவிருக்கும் டிரம்ப்

(படம்: AFP/MANDEL NGAN)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் சபையில் நாளை முதல்முறையாக உரையாற்றவிருக்கிறார்.

அனைத்துலக விவகாரங்களில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதால், அவரின் உரை அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் அந்த வருடாந்தர கூட்டத்தில் சுமார் 120 உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

உலகின் மிக முக்கியமான விவகாரங்கள் பற்றி பேசுவதற்கு நாட்டுத் தலைவர்களுக்கும், தூதர்களுக்கும், அரசதந்திரிகளுக்கும் அது வாய்ப்பாக அமையும்.

ஈரானிய, வடகொரிய அணுசக்தி மிரட்டல் குறித்து அதிகம் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மியன்மாரின் ரக்கைன் மாநில நிலவரம் பற்றிய அமைச்சர்-நிலை கூட்டத்துக்குப் பிரிட்டன் ஏற்பாடு செய்திருக்கிறது

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்