Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஸ்பெயின்: குண்டுவெடிப்புக்கும் வேன் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா?

ஸ்பெயினின் அல்கனார் நகரில் நடந்த வெடிப்புச் சம்பவம் குறித்து அந்நாட்டின் காவல்துறை புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை, அந்நகரிலுள்ள வீடு ஒன்றில் வெடிப்பு நடந்தது.

வாசிப்புநேரம் -
ஸ்பெயின்: குண்டுவெடிப்புக்கும் வேன் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா?

(படம்: AP)

ஸ்பெயினின் அல்கனார் நகரில் நடந்த வெடிப்புச் சம்பவம் குறித்து அந்நாட்டின் காவல்துறை புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை, அந்நகரிலுள்ள வீடு ஒன்றில் வெடிப்பு நடந்தது.
அதில் பெண் ஒருவர் மாண்டதுடன் 6 பேர் காயமடைந்தனர்.

எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கோளாறு, வெடிப்புக்குக் காரணமாக முதலில் கருதப்பட்டது. ஆனால் அந்தச் சம்பவத்திற்கும் பார்சிலோனா நகரில், வேன் ஒன்று மக்கள்மீது வேண்டுமென்றே ஓட்டிச் சென்று மோதிய சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கக் கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பார்சிலோனாவில் நடந்த தாக்குதலுடன் தொடர்பான சந்தேக நபர்களுக்கும் வெடிப்பு நடந்த வீட்டில் வசித்தவர்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகக் காவல்துறையினர் கருதுகின்றனர்.

வேன் தாக்குதலில் 14 பேர் மாண்டதுடன் 100 பேர் காயமடைந்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்