Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் வெளியேற்றம்

வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் பதவியிலிருந்து ஸ்டீவ் பென்னன் வெளியேறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் பதவியிலிருந்து ஸ்டீவ் பென்னன் வெளியேறியுள்ளார். அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களுடனான சந்திப்பு ஒன்றில், அதிபர் டோனல்ட் டிரம்ப் கலந்துகொண்டபோது வெள்ளை மாளிகை அந்தத் தகவலை வெளியிட்டது.

கடந்த ஆண்டின் அதிபர் தேர்தலில், திரு டிரம்ப்பிற்கு ஆதரவான கொள்கை பரப்பு முயற்சிகளில் திரு பென்னன் முக்கியமான பங்கினை வகித்ததாகக் கருதப்படுகிறார். ஆயினும், திரு பென்னன் இன வெறியர் என்று எதிராளிகளால் தொடர்ந்து குறைகூறப்பட்டு வந்தார்.

வெள்ளையின தேசியவாதிகள் கலந்துகொண்ட பேரணியில் பெண் ஒருவர் மாண்ட சம்பவத்தின் தொடர்பில் திரு டிரம்ப்பின் கருத்துகள் குறைகூறப்படும் இந்நேரத்தில் திரு பென்னனின் வெளியேற்றம் நடந்துள்ளது. திரு பென்னன் தாமே பதவி விலகினாரா அல்லது பதவி விலக அவருக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து வெள்ளை மாளிகை எதுவும் கூறவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்