Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"டிரம்ப்புடனான நல்லுறவே முக்கியம்": இஸ்ரேல்

வெள்ளை இன தேசியவாதிகளைச் சாடுவதைவிட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடனான நல்லுறவுக்கு முக்கியம் என இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாஹு தெரிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
"டிரம்ப்புடனான நல்லுறவே முக்கியம்": இஸ்ரேல்

திரு. டோனல்ட் டிரம்ப்புடன் இஸ்ரேலிய அதிபர் ருவர்ன் ரிவ்லின் (இடது).

வெள்ளை இன தேசியவாதிகளைச் சாடுவதைவிட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடனான நல்லுறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாஹு தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் தீவிர வலதுசாரிக் குழுக்களின் இனவாதப் போக்கை திரு நெட்டன்யாஹு இன்னும் வலுவாகக் கண்டித்திருக்கலாம் என்ற குறைகூறல்கள் எழுந்துள்ளன. வெர்ஜீனியா (Virginia) மாநிலத்தில் நடந்த வெள்ளையின தேசியவாதிகளுக்கான பேரணியில் பெண் ஒருவர் கொல்லப்பட்டது குறித்து திரு நெட்டன்யாஹு ஒரு முறை மட்டும் தமது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம்  தெரிவித்திருக்கிறார்.

திரு டிரம்ப்பை ஆதரிப்பது இஸ்ரேலின் நலன்களுக்கு நல்லது என்று அந்நாட்டின் தொடர்புத்துறை அமைச்சர் அயூப் கரா, Jerusalem Post நாளிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கான ஆகச் சிறந்த அமெரிக்க அதிபர் திரு டிரம்ப் என்றும் அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்