Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரொஹிஞ்சா மக்கள்-மியன்மார் ராணுவம் : பேசவிருக்கும் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி

அவர் முதன்முறையாக, ரொஹிஞ்சா முஸ்லிம்களின் தொடர்பில், மியன்மார் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிப் பேசவிருக்கிறார். 

வாசிப்புநேரம் -
ரொஹிஞ்சா மக்கள்-மியன்மார் ராணுவம் : பேசவிருக்கும் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி

(படம்:Pichayada Promchertchoo)

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள ரொஹிஞ்சா முஸ்லிம்களின் நிலை குறித்து, அந்நாட்டின் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி, இன்று பின்னேரத்தில் உரையாற்றவிருக்கிறார்.

அவருக்கு உலக நாடுகள் பல வகைகளிலும் நெருக்குதல் கொடுத்துவருகின்றன.

அவர் முதன்முறையாக, ரொஹிஞ்சா முஸ்லிம்களின் தொடர்பில், மியன்மார் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிப் பேசவிருக்கிறார்.

ரக்கைன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் குறித்து திருவாட்டி ஆங் சான் சூச்சி மேலும் தீவிரமாகச் செயல்படவேண்டும் என்றும், அங்கு நடக்கும் இனப் படுகொலை கட்டாயம் நிறுத்தப்படவேண்டும் என்றும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாட்டு அமைப்பில், அந்தப் பிரச்சனை தொடர்பாக நடைபெறும் அமைச்சர் நிலைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, அவர் நிருபர்களிடம் அவ்வாறு கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்