Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அனைத்துலகக் கண்காணிப்புக்கு அஞ்சவில்லை - மியன்மார்

ரக்கைனில் ஏற்பட்ட பிரச்சனைக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய தமது அரசாங்கம் உறுதிகொண்டிருப்பதாக அவர் சொன்னார். 

வாசிப்புநேரம் -
அனைத்துலகக் கண்காணிப்புக்கு அஞ்சவில்லை - மியன்மார்

(படம்: Pichayada Promchertchoo)

மியன்மாரின் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி, ரக்கைன் மாநிலப் பிரச்சினை தொடர்பில் அனைத்துலகக் கண்காணிப்புக்கு அஞ்சவில்லை என்று கூறியிருக்கிறார்.

அந்தப் பிரச்சனைக்கு நிலையான தீர்வைக் காண, தமது அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ரொஹிஞ்சா நெருக்கடி குறித்து நாட்டிற்கு ஆற்றிய முதல் பொது உரையில் திருவாட்டி ஆங் சான் சூச்சி அவ்வாறு கூறினார்.

ரக்கைனில் ஏற்பட்ட பிரச்சனைக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய தமது அரசாங்கம் உறுதிகொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

அந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் துயரத்தையும் மியன்மார் புரிந்துகொள்வதாக அவர் கூறினார்.

ரக்கைனில் பிரச்சினைகள் அதிகரித்த நிலையிலும் கூட, அங்கிருந்து அனைவரும் வெளியேறவில்லை என்று திருவாட்டி ஆங் சுட்டினார்.

அத்தகைய மக்கள் அங்கு தொடர்ந்து இருப்பதற்கான காரணத்தை நேரில் கண்டறிய அனைத்துலகப் பார்வையாளர்களுக்கு, அவர் அழைப்பு விடுத்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்