Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தோனேசிய அதிபருக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது

அந்த நபரிடம் கத்தி, கைத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

வாசிப்புநேரம் -
இந்தோனேசிய அதிபருக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது

(படம்: REUTERS/Beawiharta)

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோமீது தொடுக்கப்படவிருந்த பயங்கரவாதத் தாக்குதலை இந்தோனேசியக் காவல்துறையினர் முறியடித்துள்ளனர்.

இந்தோனேசியக் காவல்துறையினர் பயங்கரவாதி எனச் சந்தேகிக்கப்படும் 31 வயது ஆடவரைக் கைது செய்துள்ளனர்.
அந்த நபரிடம் கத்தி, கைத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

அவர் மேற்கு ஜாவா அருகே உள்ள ஒரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
அதிபர் விடோடோ அங்கு கலாசார நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த சில மணி நேரத்திற்கு முன்னதாக அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

I-M என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர், ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் பயங்கரவாத இணைப்பைச் சார்ந்தவர் என்று இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அதிபர் விடோடோ மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி அது. கடந்த மாதம், இந்தோனேசியத் தலைநகர், ஜாக்கர்த்தாவில் உள்ள அதிபர் மாளிகையில் அவர் மீது முதன்முறையாக பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்