Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் சீர்திருத்தங்கள் வேண்டும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப், ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -
ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் சீர்திருத்தங்கள் வேண்டும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

(படம்: AP)

அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப், ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அவர் ஐக்கிய நாட்டு நிறுவனம் குறித்த முதல் உரையின்போது அவ்வாறு கூறினார்.

தமது முழுமையான ஆற்றலை ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளிப்படுத்த தவறியிருப்பதாகவும் திரு டிரம்ப் சொன்னார்.

அதற்குப் பதிலளித்த ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர், அந்தோனியோ குட்டாரேஸ், மேலும் சிறப்பாகச் செயல்படக்கூடிய வகையில், வேகமும் நீக்குப்போக்குத் தன்மையும் உடைய அமைப்பாய் மாற்ற தாம் கடப்பாடு கொண்டிருப்பதாக உறுதியளித்தார்.

மேலும், ஐக்கிய நாட்டு நிறுவனக் கட்டுப்பாடுகள் குறித்து தமக்கும் முரண்பாடான கருத்துகள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்