Images
  • 19May China's Xi says willing to help end rift with South Korea (1)

'பெய்ச்சிங் உடனான சோலின் உறவு மிகவும் முக்கியமானது': சீன ஆட்சிமன்ற உறுப்பினர் யாங்

பெய்ச்சிங் உடனான சோலின் உறவு மிகவும் முக்கியமானது என சீனாவின் செல்வாக்கு மிக்க ஆட்சிமன்ற உறுப்பினர் திரு யாங் ஜெச்சி கூறியிருக்கிறார்.

இருதரப்புக்கும் அக்கறையுள்ள பிரச்சினைகளில், பக்கத்து நாடுகள் தொடர்பில் இருக்க வேண்டியதன் அவசியத்தை, அவர் வலியுறுத்தினார்.

தென் கொரிய சிறப்புத் தூதர் திரு லீ ஹே-சான்னை இன்று சந்தித்தபோது, திரு யாங் அந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

திரு. லீயை நேற்றுச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சர் திரு வாங் யீ, தென் கொரியாவில் அமைந்துள்ள புதிய அரசாங்கம் இருதரப்புக்கும் இடையே நிலவும் பிரச்சினைகளைக் களைவதில் கவனம் செலுத்துமென நம்பிக்கை தெரிவித்தார்.

சீனாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே மோசமடைந்துள்ள உறவை மேம்படுத்தும் நோக்கில், தென் கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே இன், சிறப்புத் தூதர் திரு. லீயைச் சீனாவுக்கு அனுப்பியுள்ளார். 

தென் கொரியாவில் தாட் எனும் நவீன ஏவுகணை எதிர்ப்புக் கட்டமைப்பை அமெரிக்கா நிறுவுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இருதரப்பு உறவு மோசமடைந்தது.

அதையடுத்து, தென் கொரிய நிறுவனங்களை சீனா புறக்கணித்தது. 

சீனாவிலிருந்து தென் கொரியப் பயணத் தலங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது. 

உங்கள் கருத்து

Top