Images
  • 19May Qatar stadium (1)

கத்தாரின் புதுப்பிக்கப்பட்டுள்ள கலிஃபா விளையாட்டரங்கம்

கத்தாரின் புதுப்பிக்கப்பட்டுள்ள கலிஃபா விளையாட்டரங்கம், இந்த வார இறுதியில் திறக்கப்படவுள்ளது.

2022-ஆம் ஆண்டு, உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்காக, முழுத் தயார் நிலையில் உள்ள முதல் விளையாட்டரங்கம் அது. 

விளையாட்டரங்கம், பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர் இருக்கைகளின் எண்ணிக்கை 48-ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரங்கைக் குளுமையாக வைக்க, அதிநவீனத் தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

திடலின் தட்பநிலை 26 டிகிரி செல்சியஸாக இருக்கும்போது, பார்வையாளர்கள் அமரும் பகுதியின் தட்பநிலை 24இலிருந்து 28 டிகிரி செல்சியஸுக்குள் இருக்கும்.

மத்தியக் கிழக்கு நாடான கத்தாரில், வெயில் காலத்தில் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும்.

அதனால், உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் பொறுப்பு கத்தாருக்கு வழங்கப்பட்டது, சர்ச்சைக்கு உள்ளானது.

அதிக வெப்பநிலை, விளையாட்டாளர்களின் உடல் நலனை பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தால், போட்டி 2022-டிசம்பர் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டது. 

உங்கள் கருத்து

Top