Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மலேசியா: கைப்பேசி பயன்படுத்திக்கொண்டே வாகனத்தை ஓட்டினால் அபராதம்

மலேசியாவில் கைத்தொலைப்பேசியைப் பயன்படுத்திக்கொண்டே வாகனத்தை ஓட்டுவோருக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.

வாசிப்புநேரம் -

கோலாலம்பூர்: மலேசியாவில் கைத்தொலைப்பேசியைப் பயன்படுத்திக்கொண்டே வாகனத்தை ஓட்டுவோருக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும். அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சர் லியாவ் தியோங் லாய் அதனைத் தெரிவித்தார்.

அவ்வாறு செய்யும் ஓட்டுநர்களைப் பிடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும், கண்காணிப்புக் கேமராக்களும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஓட்டுநர்கள் கைப்பேசியில் கவனம் செலுத்தாமல், வாகனத்தை ஓட்டுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று திரு லியாவ் சொன்னார்.

மலேசியாவில் கடந்த ஆண்டு முழுமைக்கும் சாலைகளில் கிட்டத்தட்ட 7,100 மரணங்கள் ஏற்பட்டன.

இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, அந்த எண்ணிக்கை 5,310.
ஒவ்வோர் ஆண்டும் அந்த எண்ணிக்கையை 10 விழுக்காடு குறைக்க மலேசிய போக்குவரத்து அமைச்சு இலக்கு கொண்டுள்ளது. அதனை அடைவது பெரிய சவாலாய் இருப்பதாகத் திரு லியாவ் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்