Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பேருந்துக்கான எரிபொருளாகிறது பயன்படுத்தப்பட்ட காப்பித் தூள்

பயன்படுத்தப்பட்ட காப்பித் தூள், இப்போது லண்டன் பேருந்துகள் சிலவற்றில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

வாசிப்புநேரம் -
பேருந்துக்கான எரிபொருளாகிறது பயன்படுத்தப்பட்ட காப்பித் தூள்

காப்பித் தூள்.(படம்: reuters)

லண்டன்: பயன்படுத்தப்பட்ட காப்பித் தூள், இப்போது லண்டன் பேருந்துகள் சிலவற்றில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

வடிகட்டிய காப்பித் தூளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், டீசலுடன் கலக்கப்பட்ட பிறகு, வேறு எந்த மாற்றமுமின்றி பேருந்துகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதாய் Shell எரிபொருள் நிறுவனமும் Bio-bean நிறுவனமும் இன்று தெரிவித்தன.

அதிக மோட்டார் வாகனங்கள் கொண்ட நாடுகளில் இந்தத் தொழில்நுட்பம் அதிகப் பலன் தரக்கூடியதாக உள்ளது என்று Shell சிங்கப்பூர் தெரிவித்தது.

இதுவரையில் 6,000 லிட்டர் அளவில் அத்தகைய எண்ணெய் தயார் செய்யப்பட்டுள்ளது. ஒரு பேருந்திற்கு அந்த அளவு எண்ணெயை ஓர் ஆண்டுக்குப் பயன்படுத்தலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்