Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஐ.எஸ் அமைப்பின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட கடைசி நகரம்

சிரியாவின் ராணுவப் படைகள், அல்பு கமால் நகரை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடமிருந்து மீட்டுக்கொண்டுள்ளன. ஐ.எஸ். அமைப்பின் பிடியில் இருந்த கடைசி, முக்கிய நகரம், அல்பு கமால்.

வாசிப்புநேரம் -
ஐ.எஸ் அமைப்பின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட கடைசி நகரம்

(படம்: AFP)

சிரியாவின் ராணுவப் படைகள், அல்பு கமால் நகரை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடமிருந்து மீட்டுக்கொண்டுள்ளன.

ஐ.எஸ். அமைப்பின் பிடியில் இருந்த கடைசி, முக்கிய நகரம், அல்பு கமால்.
ஈராக்குடனான எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள அந்நகரைக் கைப்பற்றியுள்ளதாகச் சிரியாவின் அரசாங்கம் ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவித்தது.

ஆனால், ஒரு வாரத்துக்கு முன்னர் ஐ.எஸ். அமைப்பு அந்நகரை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அதனைத் திரும்பவும் மீட்டுக்கொள்ள அரசாங்கப் படைகள் நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. அதில், ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களில் குறைந்தது 50 பேர் மாண்டனர்.
அரசாங்கப் படையினரில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர்.

2014ஆம் ஆண்டில் ஐ.எஸ். அமைப்பு சிரியா, ஈராக் ஆகியவற்றில் பல பகுதிகளைக் கைப்பற்றியது. அவற்றில் பெரும்பாலான பகுதிகளை அரசாங்கப் படைகள் மீட்டுக்கொண்டன. அல்பு கமால் நகரின் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து, ஐ.எஸ். அமைப்புக்குத் தளம் ஏதும் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்