Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஸிம்பாப்வே: அதிபர் பதவியிலிருந்து முகாபே எப்படியெல்லாம் வெளியேறலாம்?

ஸிம்பாப்வேயின் அதிபர் ராபர்ட் முகாபேயை, சொந்தக் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் பதவி விலகக் கோரியுள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க உறுதியாய் இருக்கிறார்.

வாசிப்புநேரம் -
ஸிம்பாப்வே: அதிபர் பதவியிலிருந்து முகாபே எப்படியெல்லாம் வெளியேறலாம்?

பதவி விலப்போவதில்லை என்ற உறுதியுடன், ஸிம்பாப்வேயின் அதிபர் ராபர்ட் முகாபே. (படம்: AFP)

ஸிம்பாப்வேயின் அதிபர் ராபர்ட் முகாபேயை, சொந்தக் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் பதவி விலகக் கோரியுள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க உறுதியாய் இருக்கிறார்.

93 வயது திரு முகாபேயை ஆளுங்கட்சி பதவிநீக்கம் செய்தது. கடந்த வாரத்தின் முற்பகுதியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அவரைப் பதவியிலிருந்து விலகக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

பதவி விலகல்

நாடாளுமன்ற நாயகரிடம் அதிபர் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தால் நாயகர் 24 மணி நேரத்தில் பதவி விலகலை வெளிப்படையாக அறிவிப்பார். நேற்று அவர் அவ்வாறு செய்ய திட்டவட்டமாக மறுத்தார்.

திரு முகாபே பதவி விலகுவதில் மற்றொரு சிக்கல் உள்ளது.

துணையதிபர் எமர்சன் நங்கக்வாவைப் (Emmerson Mnangagwa) பதவியிலிருந்து நீக்கி, தமக்கு விசுவாசமாக இருப்பவராகக் கருதப்படும் Phelekeza Mphokoவைத் துணையதிபராக அவர் நியமித்திருக்கிறார்.

ஆட்சியைப் பெற்றிருக்கும் இராணுவத்திற்கு இது பிரச்சினையாக இருக்கும்.

அரசியல் குற்றச்சாட்டு

தேசிய நாடாளுமன்றமும் செனட் சபையும் அதிபர் மீது அரசியல் குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்கு வாக்களிக்கலாம். ஆனால் இந்த நடைமுறைக்குக் காலம் பிடிக்கலாம்.

வல்லந்தமான வெளியேற்றம்

இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபோதும், நடந்தது ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல என்று அதன் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். திரு முகாபேயைச் சுற்றியிருக்கும் குற்றவாளிகளைக் குறிவைத்தே தாங்கள் நடவடிக்கை எடுக்க முற்படுவதாக இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் சிபுஸிஸோ மோயோ கூறினார்.

திரு முகாபேயைச் சட்டவிரோதமாக வெளியேற்றுவதற்கு எதிராக ஆப்பிரிக்க ஒன்றியம், தென்னாப்பிரிக்க மேம்பாட்டுச் சமூகம் ஆகிய அமைப்புகள் எச்சரித்தன.

திரு முகாபேயுடன் தொடர்ந்து பேச்சு நடத்தும் இராணுவத் தலைவர்கள் அந்த எச்சரிக்கைக்குச் செவிசாய்ப்பதுபோல் தோன்றுவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்