Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பாசம் வைத்தவரின் இறுதிச் சடங்கிற்குத் தொலை தூரம் நடந்து சென்ற பூனை

தந்தை அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தின் மண்ணை பூனை வருடிக்கொடுத்ததாக இஸ்மாயிலின் மகன் சொன்னார்.

வாசிப்புநேரம் -
பாசம் வைத்தவரின் இறுதிச் சடங்கிற்குத் தொலை தூரம் நடந்து சென்ற பூனை

(படம்: New Strait times)

மலேசியாவின் லங்காவீயில் உள்ள குவா எனும் நகரில் பூனைகளிடம் பரிவு காட்டிவந்த 90 வயது ஆடவர் மாண்டார்.

அவரை அடக்கம் செய்த இடத்தைத் தேடி 5 கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்றது அவர் பாசம் காட்டிய பூனைகளில் ஒன்று.

பள்ளிவாசலில் திரிந்த பூனைகளுக்குப் பல ஆண்டாக உணவு வைத்து வந்தள்ளார் இஸ்மாயில் மாட்.

13 பிள்ளைகள் இருந்தாலும் பூனைகள்மீதான அன்பினால் வீட்டில் 10 பூனைகளையும் வளர்த்துவந்தார் இஸ்மாயில்.

ஒரு மாதக் காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் முதுமையின் காரணமாக மாண்டதாய் அவரின் மகன் சொன்னார்.

இஸ்மாயிலின் இறுதிச் சடங்கின்போது அந்த வெள்ளைப் பூனை அங்குச் சென்றுள்ளது.

தந்தை அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தின் மண்ணை பூனை வருடிக்கொடுத்ததாக இஸ்மாயிலின் மகன் சொன்னார்.

அதனை இஸ்மாயிலின் பேரன் காணொளியில் பதிவுசெய்துள்ளார்.

இறுதிச் சடங்கிற்குப் பிறகு வெள்ளைப் பூனையை அந்தக் குடும்பத்தினர் வீட்டுக்குக் கொண்டுசென்றனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்