Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தீவிரவாதத்திற்கு எதிரான திட்டங்களுக்கு கூகுள் US$1.3 மில்லியன் நிதி

பிரிட்டனில் தீவிரவாதத்திற்கு எதிராகச் செயல்படும் உத்திபூர்வக் கலந்துரையாடலுக்கான கழகத்தோடு இணைந்து அந்த நிதி வழங்கப்படும். 

வாசிப்புநேரம் -


கூகுள், தீவிரவாதத்திற்கு எதிரான திட்டங்களுக்கு US$1.3 மில்லியன் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

உலகளவில் இந்த நோக்கத்திற்கென US$5 மில்லியன் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. கூகுள் வழங்கவிருக்கும் நிதியும் அதில் அடங்கும்.

பிரிட்டனில் தீவிரவாதத்திற்கு எதிராகச் செயல்படும் உத்திபூர்வக் கலந்துரையாடலுக்கான கழகத்தோடு இணைந்து அந்த நிதி வழங்கப்படும்.

தீவிரவாதக் கருத்துகள் பகிரப்படும் இணையத் தளங்களைத் தடை செய்வதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் என்று பிரிட்டனின் பிரதமர் தெரேசா மே கேட்டுக்கொண்டுள்ளார்.

தீவிரவாதக் கருத்துகளைக் கையாள்வதில் Google-இன் அணுகுமுறை குறைகூறலுக்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக YouTube தளத்தில் அது கையாளும் முறை விமர்சிக்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்