Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விமானத்தில் மூட்டைப்பூச்சிகளால் கடிபட்ட குடும்பம்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த குடும்பம் ஒன்று மூட்டைப்பூச்சிகளால் கடி வாங்கியதைத் தொடர்ந்து அந்த விமான நிறுவனம் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
விமானத்தில் மூட்டைப்பூச்சிகளால் கடிபட்ட குடும்பம்

(படம்: Twitter/@heatherfact)

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த குடும்பம் ஒன்று மூட்டைப்பூச்சிகளால் கடி வாங்கியதைத் தொடர்ந்து அந்த விமான நிறுவனம் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன் ஹெதர் சிஸிலாகியும் அவரது ஏழு வயது மகளும் வேங்கூவரிலிருந்து லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டனர்.

அவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த போது, முன்னால் இருக்கும் இருக்கையிலிருந்து மூட்டைப்பூச்சிகள் ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அதன் பின் உணவு நேரத்திலும் பூச்சிகளைப் பார்த்தார் சிஸிலாகி.

அதைப் பற்றி விமானப் பணிப்பெண்ணிடம் புகார் செய்தார் அவர்.

விமானத்தில் போதிய இடம் இல்லாததால் மகளையும் தாயாரையும் வேறு இருக்கைகளுக்கு மாற்ற முடியவில்லை.

மறுநாள் சுலோவேனியா சென்றடைந்த இருவருக்கும் உடல் முழுதும் பூச்சி கடித்த தடிப்பு இருப்பது தெரியவந்தது.

பிரச்சினையைப் பற்றி விமான நிறுவனத்திற்கு தெரிவிக்க முயன்றார் சிஸிலாகி.

ஆனால் அவர் நிறுவனத்திடம் புகார் கொடுப்பதற்கு முன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மகளின் கால்களில் பூச்சி கடித்த இடங்களைப் படமெடுத்து Twitterஇல் பதிவுசெய்தார் ஆக்ரோஷமடைத்த தயார்.

சில நாட்களுக்கு பின்னர் அவர்களைத் தொடர்புகொண்ட நிறுவனம், அவர்கள் இருவரும் திரும்பிவரத் தேவையான விமானப் பயணத்திற்கான
வர்த்தகப் பிரிவுச் சீட்டுகளை வழங்கி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்