Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எலிஸபெத் அரசியாரும், இளவரசர் பிலிப்பும் இன்று எழுபதாவது திருமண ஆண்டுநிறைவைக் கொண்டாடுகின்றனர்

பிரிட்டனின் எலிஸபெத் அரசியாரும் அவரது கணவர் இளவரசர் பிலிப்பும் இன்று தங்களின் எழுபதாவது திருமண ஆண்டுநிறைவைக் கொண்டாடுகின்றனர். 

வாசிப்புநேரம் -
எலிஸபெத் அரசியாரும், இளவரசர் பிலிப்பும் இன்று எழுபதாவது திருமண ஆண்டுநிறைவைக் கொண்டாடுகின்றனர்

(படம்: AFP / STR)

பிரிட்டனின் எலிஸபெத் அரசியாரும் அவரது கணவர் இளவரசர் பிலிப்பும் இன்று தங்களின் எழுபதாவது திருமண ஆண்டுநிறைவைக் கொண்டாடுகின்றனர்.

பிரிட்டனில் ஆட்சியில் இருக்கும் தம்பதி எழுபதாவது திருமண ஆண்டுநிறைவைக் கொண்டாடுவது இதுவே முதல் முறை.

பதின்ம வயதில் இருவரும் சந்தித்தனர்.

எலிஸபெத் அரசியார் 25 வயது இளவரசியாக இருந்த போது திருமணம் புரிந்துகொண்டனர்.

திருமண ஆண்டுநிறைவு தொடர்பில் பொது நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வின்ட்சர் (Windsor) அரண்மனையில் இன்று மாலை நடைபெறும் தனிப்பட்ட விருந்து உபசரிப்பில் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் கலந்துகொள்வர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்