Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

150 ஆண்டுகளுக்குப் பிறகு குமுறத் தொடங்கியுள்ள இந்திய எரிமலை

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் உள்ள எரிமலை, மீண்டும் பாறைக் குழம்பைக் கக்கத் தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

பனாஜி: அந்தமான், நிக்கோபார் தீவுகளில் உள்ள எரிமலை, மீண்டும் பாறைக் குழம்பைக் கக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் இன்னும் உயிர்ப்போடு உள்ள ஒரே எரிமலை அதுதான்.

150 ஆண்டுகளுக்குப் பிறகு 'பேரன் ஐலந்து' (Barren Island) எரிமலை குமுறத் தொடங்கியுள்ளதை கோவாவிலுள்ள இந்திய பெருங்கடலியல் அமைப்பு தெரிவித்தது. 

5 முதல் 10 நிமிடங்கள் வரையிலான இடைவெளிகளில் எரிமலை சிறிதளவு குமுறுவதாக அமைப்பு சொன்னது. 

எரிமலை இருக்கும் தீவில் யாரும் வசிக்கவில்லை. 

தலைநகர் போர்ட் பிளேரிலுள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகு அங்குச் செல்ல இந்தியர்களுக்கு அனுமதியுண்டு.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்