Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விலா எலும்புக்கூட்டின் வெளியே இதயத்தைக் கொண்ட ரஷ்யச் சிறுமி

அமெரிக்காவில் வசிக்கும் விர்சாவியாவுக்கு வயது ஏழு. அந்த வயதுச் சிறுமிகளைப் போன்றே அவருக்கும் ஆடுவது, ஓவியம் வரைவது இவையெல்லாம் பிடிக்கும்.

வாசிப்புநேரம் -
விலா எலும்புக்கூட்டின் வெளியே இதயத்தைக் கொண்ட ரஷ்யச் சிறுமி

(படங்கள்: Instagram/dariborun)

அமெரிக்காவில் வசிக்கும் விர்சாவியாவுக்கு வயது ஏழு. அந்த வயதுச் சிறுமிகளைப் போன்றே அவருக்கும் ஆடுவது, ஓவியம் வரைவது இவையெல்லாம் பிடிக்கும்.

ஆனால் மற்ற சிறுமிகளிலிருந்து விர்சாவியா மாறுபட்டவர்.

ஒரு மில்லியனில் ஒருவருக்கும் குறைவாக பாதிக்கப்படும் அரியவகை நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

விர்சாவியாவின் இதயம் அவரது விலா எலும்புக்கூட்டுக்கு வெளியே அமைந்துள்ளது. மெல்லிய தோல் மட்டுமே அதனைப் பாதுகாக்கிறது.

விர்சாவியா பிறந்தபோது அவர் நீண்ட காலம் உயிர்வாழ முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

ரஷ்யாவில் பிறந்த அவர், சிகிச்சைக்காகத் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.


ரத்த அழுத்தப் பிரச்சினைகளால் விர்சாவியாவின் அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டுள்ளது. அவரது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் அவருக்குத் தரப்பட்டுள்ளன.

இதயம் விலா எலும்புக்கூட்டின் வெளியே இருப்பதால், தடுக்கி விழுந்தால் கூட அவர் உயிரிழக்க நேரிடும்.

விர்சாவியாவின் இதயத்தை விலா எலும்புக்கூட்டினுள் பொருத்த சிக்கலான பல அறுவை சிகிச்சைகள் செய்யப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்