Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தொடர்புக் குறைபாடு உள்ள குழந்தைகள் பற்றி சிறுவர்களுக்கு எடுத்துக்கூறும் புத்தகம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த ஓர் அன்னை வித்தியாசமான புத்தகம் எழுதியுள்ளார்.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த ஓர் அன்னை வித்தியாசமான புத்தகம் எழுதியுள்ளார்.

Autism எனும் தொடர்பு குறைப்பாடு உள்ள தம் மகன் வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுடன் பழக அந்தப் புத்தகம் உதவும் என்பது அவருடைய நம்பிக்கை.

6 வயது ஹூகோ அலெஸ்சண்டர் (Hugo Alexander).

ஹூகோவுக்கு, மிதமான தொடர்புக் குறைபாடும், அறிவுத்திறன் குறைபாடும் உள்ளது.

ஹூகோவுக்கு உடைகளை அணிவிப்பது போன்ற வழக்கமான செயல் கூட பெரும் சவால் என்கிறார் அவருடைய தாயார் மிசா.

ஹூகோவுக்கு, அவரின் சகோதரர்களும், குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்புக் கொடுத்துச் சிரமமான நிலையைச் சமாளிக்க உதவுகின்றனர்.

என்றாலும், ஹூகோவின் நிலை பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது கடினம்.

தொடக்கப்பள்ளியில் சேர்த்தவுடன் பல்வேறு தரப்பினருக்கும் ஹூகோ பற்றி விளக்க வேண்டியிருந்தது.

புத்தகம் எழுதுவதற்கு அதுவே தூண்டுகோல் என்றார் மிசா.

வித்தியாசமான ஒரு குழந்தை, எப்படி நண்பர்களைத் தேடிக் கொள்கிறது என்பதைப் புத்தகத்தில் உள்ள கதை சித்திரிக்கிறது.

சிட்னியில் உள்ள சில பள்ளிகளில் அந்தப் புத்தகம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

வழக்கமான பள்ளிகளில் பயிலும் ஹூகோ போன்ற மாணவர்கள், மற்ற மாணவர்களின் ஆதரவைப் பெறுவதில் பெரும் சவாலை எதிர்கொள்வதுண்டு.

தொடர்புக் குறைபாடு உள்ள குழந்தைகளுடன் பழகுவது எவ்வாறு என்பதை மற்ற குழந்தைகளுக்குப் புரிய வைப்பதில் புத்தகம் உதவும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்