Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கொலையாளியைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் 4.75 மில்லியன் டாலர் பரிசு

தொடர்ச்சியாகக் கொலைகளைச் செய்த கொலையாளியைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் 4.75 மில்லியன் அமெரிக்க டாலர் வெகுமதி வழங்கத் தயார் என அறிவித்துள்ளது ஆஸ்திரேலியக் காவல்துறை.

வாசிப்புநேரம் -
கொலையாளியைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் 4.75 மில்லியன் டாலர் பரிசு

(படம்: AFP)

சிட்னி : தொடர்ச்சியாகக் கொலைகளைச் செய்த கொலையாளியைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் 4.75 மில்லியன் அமெரிக்க டாலர் வெகுமதி வழங்கத் தயார் என அறிவித்துள்ளது ஆஸ்திரேலியக் காவல்துறை.

1980களில் அந்தக் கொலையாளி, மெல்பர்னைச் சேர்ந்த ஆறு பெண்களைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

நகரின் ஒதுக்குப்புறத்தில் அந்தப் பெண்களின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்தக் கொலைகளைப் புரிந்தது ஒரு தனிநபராகவும் இருக்கலாம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களாகவும் இருக்கலாம்.

அந்த ஆறு கொலைகள் பற்றிய துப்புத் துலக்குவதில் உதவி செய்வோருக்கு, ஒன்றுக்கு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் என வெகுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியக் காவல்துறை வரலாற்றில், இவ்வளவு பெரிய தொகை, வெகுமதியாக அறிவிக்கப்பட்டதில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்