Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மூளை சிகிச்சையின்போது கிட்டார் வாசித்த இந்தியர்

நரம்பியல் பிரச்சினை கொண்டிருந்ததால், கிட்டாரை வசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினார், இந்தியாவைச் சேர்ந்த அபிஷேக் பிரசாத்.

வாசிப்புநேரம் -
மூளை சிகிச்சையின்போது கிட்டார் வாசித்த இந்தியர்

(படம்: Ahsan Ahmed/Facebook)

பெங்களூர், இந்தியா : நரம்பியல் பிரச்சினை கொண்டிருந்ததால், கிட்டாரை வசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினார், இந்தியாவைச் சேர்ந்த அபிஷேக் பிரசாத்.

அந்தப் பிரச்சினையால் விரல்களில் வலி ஏற்படும்.

விரும்பியபடி கிட்டாரை அவரால் வாசிக்க இயலவில்லை.

அந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் அமைந்தது, மூளை சிகிச்சை.

மூளையில் எங்குப் பிரச்சினை இருக்கிறது என்பதைக் கண்டறிய முயன்றனர், மருத்துவர்கள்.

அவர் கிட்டாரை வாசிக்கும்போது, நரம்பில் எங்கு கோளாறு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டியிருந்தது.

ஆகையால் சிகிச்சையின்போது அவரை கிட்டாரை வாசிக்க வைத்தனர் மருத்துவர்கள்.

7 மணிநேர சிகிச்சைக்குப் பிறகு அவரின் விரல்கள் முழுமையாக கிட்டாரை வழக்கம்போல் வாசிக்கும் ஆற்றலை மீண்டும் பெற்றன.

அறுவை சிகிச்சை மேசையிலேயே நிகழ்ந்த அந்த மாற்றத்தைக் கண்டு தாம் அதிசயித்துப் போனதாகக் கூறினார் அபிஷேக்.

100 விழுக்காடு தாம் விரும்பியபடி இப்போது விரல்களை அசைக்க முடிவதாகக் கூறி இசைக் கூறுகள் சிலவற்றை வாசித்துக் காட்டினாராம் அவர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்