Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள அரசதந்திர சர்ச்சைக்குக் காரணமான இணையத் தாக்குதலுக்கு யார் காரணம்?

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள அரசதந்திர சர்ச்சைக்குக் காரணமான இணையத் தாக்குதலை,கத்தார், ஐக்கிய அரபு சிற்றரசுகளுடன் தொடர்புபடுத்தியுள்ளது. 

வாசிப்புநேரம் -
வளைகுடாவில் ஏற்பட்டுள்ள அரசதந்திர சர்ச்சைக்குக் காரணமான இணையத் தாக்குதலுக்கு யார் காரணம்?

படம்: AFP/Thomas Samson

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள அரசதந்திர சர்ச்சைக்குக் காரணமான இணையத் தாக்குதலை,கத்தார், ஐக்கிய அரபு சிற்றரசுகளுடன் தொடர்புபடுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு சிற்றரசுகளின் இரண்டு இணையத்தளங்களில் இருந்து ஊடுருவல் நடந்ததாகக் கண்டுபிடிப்புகளில் தெரியவந்துள்ளது. கத்தாரின் அதிகாரிகள் அந்தத் தகவலை வெளியிட்டனர்.

அத்தகைய ஊடுருவல் நடவடிக்கைகளால் ஐக்கிய அரசு சிற்றரசுகள் அதிகம் பலனடையும் எனக் கத்தார் சொன்னது. கடந்த மே மாதம், கத்தாரின் ஊடகங்களில் ஈரானையும் ஹமாஸையும் பாராட்டுவதாகக் கதைகள் வெளியிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கத்தாருடனான உறவைச் சில வளைகுடா நாடுகள் துண்டித்துக்கொண்டன. கத்தார் தீவிரவாதத்துக்கு நிதி உதவி வழங்குவதாகக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்