Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கத்தார் விவகாரம்: 4 அரபு நாடுகளுடன் பேச்சு நடத்த கத்தார் தலைவர் தயார்

கத்தாரின் தலைவர், ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி சர்ச்சை குறித்து, கத்தாருடன் உறவை துண்டித்துக்கொண்ட மற்ற நான்கு அரபு நாடுகளுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
கத்தார் விவகாரம்: 4 அரபு நாடுகளுடன் பேச்சு நடத்த கத்தார் தலைவர் தயார்

(படம்: Qatar News Agency/Handout via REUTERS)

கத்தாரின் தலைவர், ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி சர்ச்சை குறித்து, கத்தாருடன் உறவை துண்டித்துக்கொண்ட மற்ற நான்கு அரபு நாடுகளுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

ஆனால், பிரச்சனைக்கு தீர்வுக் காணும் எந்த தீர்மானமும், கத்தாரின் அரசுரிமையை மதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஜூன் மாதத்திலிருந்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள், கத்தாருடனான உறவைத் துண்டித்துக்கொண்டன.

பயங்கரவாதக் குழுக்களுக்கு கத்தார், டோஹா நிதி உதவி அளிப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கத்தார் பயங்கரவாத குழுக்களுக்கு அளிக்கும் பண உதவியை நிறுத்த எடுத்திருக்கும் இந்த முயற்சி, வாஷிங்டனுக்கு திருப்தி அளித்திருப்பதாக, அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்