Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வட கொரியாவுக்குச் செல்ல அமெரிக்கர்களுக்குத் தடை விதிக்கப்படும் - அமெரிக்க வெளியுறவு அமைச்சு

வட கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ள அமெரிக்கர்களுக்குத் தடை விதிக்கவுள்ளது அமெரிக்க அரசாங்கம். சுற்றுப்பயணம் சென்றிருந்த அமெரிக்க மாணவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மாண்டார்.

வாசிப்புநேரம் -
வட கொரியாவுக்குச் செல்ல அமெரிக்கர்களுக்குத் தடை விதிக்கப்படும் - அமெரிக்க வெளியுறவு அமைச்சு

(படம்: REUTERS/Damir Sagolj/File Photo)

வாஷிங்டன்: வட கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ள அமெரிக்கர்களுக்குத் தடை விதிக்கவுள்ளது அமெரிக்க அரசாங்கம்.

சுற்றுப்பயணம் சென்றிருந்த அமெரிக்க மாணவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மாண்டார்.

எனவே, வட கொரியாவுக்குச் செல்வதால் கைதாகக் கூடிய ஆபத்து அதிகமிருப்பதாகக் கருதி அந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதற்கென புவியியல் சுற்றுலாக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அமல்படுத்தவுள்ளார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன்.

அந்தச் சட்டம் நடப்புக்கு வந்ததும், வட கொரியாவுக்குச் செல்ல அமெரிக்க பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்த இயலாது.

வட கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்வதென்றால் அமெரிக்கர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் சிறப்பு அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்