Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

யூடியூப்பைக் கலக்கி வரும் பாட்டி

தென் கொரியாவைச் சேர்ந்த 70 வயதுப் பாட்டி ஒருவர் தற்போது யூடியூப்பைக் கலக்கி வருகிறார்.

வாசிப்புநேரம் -
யூடியூப்பைக் கலக்கி வரும் பாட்டி

(படம்: KOREA_GRANDMA/INSTAGRAM/SCREENSHOT)

தென் கொரியாவைச் சேர்ந்த 70 வயதுப் பாட்டி ஒருவர் தற்போது யூடியூப்பைக் கலக்கி வருகிறார்.

அவருக்கு 300,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

‘கொரிய கிராண்ட்மா’ என்ற பெயரில் அழகுக் குறிப்புகள் முதல் விடுமுறைக் காணொளிப் பதிவுகள் வரை அவருடைய யூடியூப்பில் பகிர்ந்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவுக்குத் தமது பேத்தி கிம்முடன் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்தது தான் யூடியூப்பில் அவர் பதிவேற்றம் செய்த முதல் காணொளி.

தமது அனுபவத்தைப் பாட்டி நகைச்சுவையாகத் தொகுத்து வழங்கியது மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.

70 வயதில் வாழ்க்கை முடிந்துவிட்டது என நினைத்திருந்ததாகக் கூறும் பாட்டி, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் வாழ்க்கை 71இல் தான் தொடங்குவதாக இப்போது கருதுகிறார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்