Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பிரான்ஸ்: தீவிர வலதுசாரிக் கட்சித் தலைவர் தோல்வியடைவார் - கணிப்புகள்

ஃபிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்றில், தீவிர வலதுசாரிக் கட்சித் தலைவர் மரின் லப்பென்னுக்கு (Marine Le Pen), முன்னுரைக்கப்பட்ட முன்னிலை விழுக்காடு அதிகரித்துள்ளது. கருத்துக்கணிப்புகள் அவ்வாறு கூறின. 

வாசிப்புநேரம் -
பிரான்ஸ்: தீவிர வலதுசாரிக் கட்சித் தலைவர் தோல்வியடைவார் - கணிப்புகள்

மரின் லப்பென். (படம் : ராய்ட்டர்ஸ்)

ஃபிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்றில், தீவிர வலதுசாரிக் கட்சித் தலைவர் மரின் லப்பென்னுக்கு (Marine Le Pen), முன்னுரைக்கப்பட்ட முன்னிலை விழுக்காடு அதிகரித்துள்ளது. கருத்துக்கணிப்புகள் அவ்வாறு கூறின. இருப்பினும், அவர் மறு சுற்றில் பெரும்பான்மை வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவுவார் என்று BVA-Salesforce கருத்துக்கணிப்பு கூறியது.

முதல் சுற்று தேர்தல், ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறும். தேசிய முன்னணித் தலைவரான திருவாட்டி லப்பென்னுக்கு ஆதரவாக 27 புள்ளி 5 விழுக்காட்டினர் முதல் சுற்றில் வாக்களிப்பர் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறின. இம்மாதம் 4ஆம் தேதி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு 25 விழுக்காட்டு வாக்குகள் கிடைக்கும் என்று கூறியிருந்தது. முன்னைய கருத்துக் கணிப்பில் இரண்டாம், மூன்றாம் நிலையில் வந்த வேட்பாளர்கள் இருவருக்குமே ஒரு விழுக்காட்டு வாக்குகள் குறையும் என்று அண்மை கருத்துக் கணிப்பு கூறியது.

இருப்பினும், மே மாதம் 7ஆம் தேதி நடக்கும் இரண்டாம் சுற்றுத் தேர்தலில் திருவாட்டி லப்பென் வெற்றிபெற மாட்டார் என்று கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்