Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

நியூசிலந்திற்குச் சிட்டாய்ப் பறக்கும் சிங்கப்பூர்கள்

 சிங்கப்பூரைச் சேர்ந்த  900க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், நியூசிலந்துத் தலைநகர்  வெல்லிங்ட்டனில் வேலைசெய்ய விண்ணப்பித்திருக்கின்றனர். தகவல் தொழில்நுட்ப நிபணர்களை ஈர்ப்பதில் அதிகரித்துள்ள உலகளாவிய போட்டியை அது பிரதிபலிப்பதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவுக்கு அடுத்து சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள், LookSee Wellington எனும் திறன்-ஈர்ப்புத் திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டுவதாக வெல்லிங்ட்டன் வட்டாரப் பொருளியல் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது. திட்டத்திற்கு இதுவரை 7ஆயிரத்துக்கும் மேலானோர் பதிவுசெய்துள்ளனர்.

ஆரம்பக்கட்டச் சோதனைகளில் அவர்களில் பெரும்பாலானோர் வெற்றியடைந்ததாகக் கூறப்பட்டது. விண்ணப்பதாரர்களின் உயர் தரத்தை அது பிரதிபலிப்பதாகவும் அமைப்பு கூறியது.

இதற்கிடையே, சிங்கப்பூரும் தகவல் தொழில்நுட்பத் திறனாளர்களை ஈர்க்க மும்முரமாக முயன்று வருகிறது. நிறுவனங்கள் பல, மின்னிலக்க மயமாகும் வேளையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆள்சேர்ப்பு நடவடிக்கை மேலும் அதிகரிக்கும் என்று Robert Waltersஆள்சேர்ப்பு நிறுவனம் கூறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்