Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் : அவசரமாகக் கூடுகிறது ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்புச் சபை

ஜெருசலத்தில் நிலவும் பதற்றமான சூழலைத் தணிப்பதற்காக ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்புச் சபை நாளை அவசரமாகக் கூடவுள்ளது. 

வாசிப்புநேரம் -
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் : அவசரமாகக் கூடுகிறது ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்புச் சபை

படம்: AFP/Musa Al Shaer

ஜெருசலத்தில் நிலவும் பதற்றமான சூழலைத் தணிப்பதற்காக ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்புச் சபை நாளை அவசரமாகக் கூடவுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த ஒரு வாரமாக மூர்க்கமான தகராறு தொடர்கிறது. இஸ்ரேலுடன் அதிகாரபூர்வ உறவுகளைத் துண்டித்துக்கொள்வதாகப் பாலஸ்தீனத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார்.

இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே அண்மைக்காலத்தில் இவ்வளவு மூர்க்கமான மோதல் நிகழ்ந்ததில்லை. நேற்று இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரும், பாலஸ்தீனப் போராட்டக்காரர்களும் மோதிக் கொண்டனர்.

அதில் பாலஸ்தீனர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் கடந்த வாரம், அல் அக்ஸா பள்ளி நுழைவாயிலில் பாதுகாப்புச் சோதனைக் கருவியைப் பொருத்தியது.

அந்தப் பள்ளியை யூதர்களும், முஸ்லிம்களும் புனிதத் தலமாகப் போற்றுகின்றனர். சென்ற வாரம் அல் அக்ஸா பள்ளிவாசல் அருகே இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் இருவர் கொல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்தே பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கருவி பொருத்தப்பட்டதாகச் சொல்கிறது இஸ்ரேல்.

ஆனால் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியில் இஸ்ரேல் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காகவே பாதுகாப்புக் கருவியைப் பொருத்தியுள்ளதாக பாலஸ்தீனர்களும், முஸ்லிம் அதிகாரிகளும் அஞ்சுகின்றனர்.

இதற்கிடையே, நேற்று முன்தினம், மேற்குக் கரையில் இஸ்ரேலியர்கள் மூவரை அவர்களுடைய வீட்டில் வைத்து பாலஸ்தீன இளையர்கள் குத்திக் கொன்றனர்.

அதைத் தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் உச்ச விழிப்பு நிலையில் உள்ளது. சந்தேகத்துக்குரியவர்களின் வீடுகளை இஸ்ரேல் இராணும் சோதனையிட்டது.

அந்த வீடுகளை இராணுவத்தினர் இடித்துத் தள்ளி விடுவரோ என்று பாலஸ்தீனர்கள் அஞ்சுகின்றனர். அல் அக்ஸா பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பு ஜோர்டான் வசம் உள்ளது.

இஸ்ரேலும், ஜோர்டானும் இணைந்து செயல்பட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்; அந்த வட்டாரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்