Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஃபுக்குஷிமா அணு உலையில் முதன்முறையாக அணு எரிபொருள் கண்டுபிடிப்பு

ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலை ஒன்றில் முதன்முறையாக அணு எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, எரிமலைக் குழம்பால் உருவான பாறைகள் போன்ற தோற்றத்தில் உள்ளது.

வாசிப்புநேரம் -
ஃபுக்குஷிமா அணு உலையில் முதன்முறையாக அணு எரிபொருள் கண்டுபிடிப்பு

படம்: AFP/Handout

ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலை ஒன்றில் முதன்முறையாக அணு எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, எரிமலைக் குழம்பால் உருவான பாறைகள் போன்ற தோற்றத்தில் உள்ளது.

மூன்று நாள் சோதனையின் முடிவில் அணு ஆலையை நிர்வகிக்கும் Tokyo Electric Power நிறுவனம் அந்தத் தகவலைத் தெரிவித்தது.

2011 ஆம் ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட விபத்தின் சேதத்தைக் கண்டறிய அந்த நிறுவனம் முயன்று வருகிறது. நீருக்கு அடியில் தொலைவில் இருந்து இயக்கப்படும் இயந்திரம் அணு உலையில் இருக்கும் எரிபொருளைப் படம் பிடித்துள்ளது.

ஃபுக்குஷிமா அணு ஆலையின் செயல்பாட்டை முற்றிலும் முடக்குவதற்கு முன், அதில் படிந்துள்ள எரிபொருள் அளவைக் கண்டறிய வேண்டியது அவசியம். அந்த நடவடிக்கை முடிய பல்லாண்டுகள் பிடிக்கும். அதற்கான செலவு US$190 பில்லியனை எட்டும் என ஜப்பானிய அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட முதல் முயற்சி கைவிடப்பட்டது. எரிபொருளைக் கண்டுபிடிக்கும் இயந்திரம் உலைக்குள் நகர்வதில் அப்போது சிரமம் ஏற்பட்டதால், சோதனையிட வேண்டிய இடங்களை எட்ட முடியவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்